எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நொடிக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்தார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:21 pm

சா. ஜெயப்பிரகாஷ்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து நொடிக்கு 6000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த ஜூலை 3ஆம் தேதி அறிவித்தார்.

கபினியில் இருந்து 3000 கனஅடியும், கேஎஸ்ஆர் அணையிலிருந்து 3000 கனஅடியும் திறக்கப்படுவதாக கூறப்பட்டது. முறையான இந்த அறிவிப்புகளுக்கு முன்பே மாண்டியா மாவட்டத்தில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் குதித்துவிட்டன.

இந்த நிலையில், ஒரு நாளில் தண்ணீர் தமிழ்நாட்டு எல்லைக்குள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. நீண்ட இடைவெளியில் வறண்ட ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் மெல்லத்தான் வந்து சேரும் என்றும் கூறப்பட்டது.

இதன்படி செவ்வாய்க்கிழமை இரவு பிலிகுண்டுலு வந்து சேரலாம் என தமிழ்நாட்டுப் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆயினும் இன்று காலை 8 மணி நிலவரப்படி வெறும் 120 கனஅடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. கடந்த இரு நாட்களாகவே இதே நிலை காணப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.