/

 ஜெயலலிதா பிறந்தநாள்: தமிழக அரசு, ஓபிஎஸ், அதிமுகவினர் கொண்டாட்டம்

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை, தமிழக அரசு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் என மூன்று தரப்பினரும் மூன்று முறைகளில் கொண்டாடினர்.

Updated On :24 பிப்ரவரி 2017, 12:24 pm


சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை, தமிழக அரசு, ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மற்றும் அதிமுக தொண்டர்கள் என மூன்று தரப்பினரும் மூன்று முறைகளில் கொண்டாடினர்.

தமிழக அரசு சார்பில், முதல்வர் பழனிசாமி, 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தினை, சென்னை ஓமந்தூர் சிறப்பு மருத்துவமனையில், மகிழம் பூ மரக் கன்றினை நட்டு தொடங்கி வைத்தார்.

அதே சமயம், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகரில் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கிப் பேசினார். அப்போது, அதிமுகவின் பொதுச் செயலர் என்றால் அது ஜெயலலிதா மட்டும்தான் என்று கூறினார்.

அதிமுக தொண்டர்கள், பல்வேறு இடங்களில் ஜெயலலிதா திருவுருவப் படத்தை வைத்து அவருக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.