மதுரை: மனுதாரர் ஒருவருக்கு நில அளவை செய்து தனிப்பட்டா வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சரியாக செயல்படுத்தாத மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தாருக்கு ஆறு வார 'சமூக சிறை தண்டனை' அளித்து மேலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்தவர்கள் ஹுசைன் மொகம்மது மற்றும் ஜவாஹிர் அலி. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட நிலத்தகராறின் காரணமாக நிலங்களை அளவை செய்து தனித்தனி பட்டா வழங்க வேண்டும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தாரை அணுகினார்கள். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
எனவே அவர்கள் மேலூர் முன்சீப் நீதிமன்றத்தைஅணுகினார்கள். வழக்கை விசாரித்த முன்சீப் நீதிமன்றமானது உடனடியாக நிலங்களை அளவை செய்து தனித்தனி பட்டாக்கள் வழங்குமாறு ஆணை பிறப்பித்தது. இதே வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமும் தனித்தனி பட்டாக்கள் வழங்குமாறு மேலூர் நீதிமன்ற ஆணையை உறுதி செய்தது. ஆனால் அப்போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
இதனால் கடும் ஏமாற்றத்துக்கு ஆளான மனுதாரர்கள் ஹுசைன் மொகம்மது மற்றும் ஜவாஹிர் அலி இருவரும் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தார் மீது மேலூர் முன்சீப் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இதனை இன்று விசாரித்த மேலூர் முன்சீப் நீதிமன்றமானது வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேலூர் தாசில்தாருக்கு ஆறு வார 'சமூக சிறை தண்டனை' அளித்ததுடன் அவர்களுடைய வாகனங்களையும் பறிமுதல் செய்யுமாறு உத்தரவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!
அரசன் குழுவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய சமுத்திரக்கனி!

தெலங்கானாவில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியில் திடீர் புகை!
திமுக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு: சு. வெங்கடேசன் எம்.பி.
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


