மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வாடகை பாக்கி என்கிற குற்றச்சாட்டுக்கு ஆஸ்ரம் பள்ளி விளக்கம்!

சென்னை - கிண்டியில் உள்ள ஆஸ்ரம் பள்ளி பூட்டப்பட்டது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது...

News image
Updated On :16 ஆகஸ்ட் 2017, 10:38 am

சென்னை - கிண்டியில் உள்ள ஆஸ்ரம் பள்ளி பூட்டப்பட்டது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் கிண்டி கிளையைச் சேர்ந்த ஆஸ்ரம் பள்ளிக்கு 5 ஆண்டுகளாக ரூ. 10 கோடி வாடகைப் பணம் பாக்கி வைத்துள்ளதால், கட்டட உரிமையாளர் பள்ளியைப் பூட்டுப் போட்டு மூடியதாக இன்று செய்திகள் வெளியாகின. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. 

இந்நிலையில் பள்ளி முதல்வர் வந்தனாவும் பள்ளித் தரப்பு வழக்கறிஞரும் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது: 

கட்டட உரிமையாளர் குடும்பப் பிரச்னையால் பள்ளிக்கு மிகுந்த தொல்லை கொடுத்தார். அதிகமான வாடகை வசூலிப்பதால் இந்தப் பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது. பள்ளி குறித்து அவதூறு செய்தியைப் பரப்பியுள்ளார். பள்ளிக்குக் களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டுள்ளார். இதையடுத்து அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். ரூ. 10 கோடி வாடகை நிலுவை கிடையாது. பள்ளி மாணவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.