புதுச்சேரி: புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி 1950-ஐ தொடர்பு கொள்ளலாம் என தேர்தல் அதிகாரி வ.மலர்க்கண்ணன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை:
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற மக்களின் துணையோடு தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.
தேர்தல் நடைமுறை அமுலில் இருக்கும் போது, பொது இடங்களில் கட்சி சார்ந்த சுவரொட்டிகள், பேனர்கள், கொடிகள் இருக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள் தந்து வாக்கு சேகரிக்கக்கூடாது.
காலை 6 மணிக்கு முன்போ அல்லது இரவு 10 மணிக்கு பின்போ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது.
மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே தேர்தல் நடத்தை விதி மீறல்கள் தொடர்பான புகார்களை மாவட்ட தேர்தல் அதிகாரி (கட்டுப்பாட்டு அறை) கட்டணமில்லா தொலைபேசி எண். 1950-லும், தேர்தல் நடத்தும் அதிகாரி-7, (கட்டுப்பாட்டு அறை) தொலைபேசி எண்.0413-2245100 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.
கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கும். மேலும் இ-மெயில் as-ro7.pon@nic.in, http://egov-election.pon.nic.in/theervu/ என்ற இணையதளத்திலும் புகார்களை பதிவு செய்யலாம்.
புகார்களை பெற்ற உடனே நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார் மலர்க்கண்ணன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆப்பிள் நிறுவனத் தலைவர் டிம் குக் பதவி விலகுகிறார்!

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

