டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

நம்பிக்கை இருக்கிறதா? செய்தியாளரின் கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்...

காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:44 am

DIN


சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக நிதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை, மு.க. ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசிய பிறகு வெளியே வந்த தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடனான மு.க. ஸ்டாலின் நேற்று சந்தித்துப் பேசிய போது எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையின் நகலை தலைமைச் செயலாளரிடம் வழங்கினோம் என்றார்.

மேலும், அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் வலியுறுத்தினோம். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றார் ஸ்டாலின்.

தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்தீர்களா என்று கேட்டதற்கு, தலைமைச் செயலாளரை நேரில் பார்க்கவில்லை. தீர்மான அறிக்கை நகலை அவரது அலுவலகத்தில் வைத்துள்ளோம் என்று ஸ்டாலின் பதில் அளித்தார்.

காவிரி விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறதே என்ற கேள்விக்கு...

நீதிமன்றம் என்பது வேறு, அது சட்ட ரீதியாக செல்ல வேண்டியது.
அதே சமயம், கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தங்களது உணர்வை வெளிப்படுத்துகிறோர்களே, அது போல தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம் என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும், இந்த சந்திப்பில் நம்பிக்கை வந்துள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நம்பிக்கை இருப்பதால்தான் இங்கே வந்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி தந்திருக்கிறார்கள். அவர்கள் தரப்பில் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருக்கிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.