அம்பை பகுதிகளில் 30 ஆயிரம் மதிப்புள்ள கலப்பட கருப்பட்டி பறிமுதல்
அம்பாசமுத்திரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட கருப்பட்டி உள்ளிட்ட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


அம்பாசமுத்திரம் பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கலப்பட கருப்பட்டி உள்ளிட்ட சுமார் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அம்பாசமுத்திரம் பகுதியில் தொடர்ந்து சுகாதாரமற்ற, கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனை செய்வதாக வந்தப் புகாரினையடுத்து தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் குமார் ஜயந்த் ஆணைப்படியும் திருநெல்வேலி மாவட்ட நியமன அலுவலர் செந்தில்குமார் அறிவுறைப்படியும் அம்பாசமுத்திரம் வட்டார உணவுப் பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை அம்பாசமுத்திரம் தென்காசி சாலையில் சோதனையில் ஈடுபட்டாராம். அப்போது அந்தவழியாக சைக்கிளில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது அவரிடம் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்ததாம். இதையடுத்து சுமார் 4 ஆயிரம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
மேலும் அந்த வழியாக மினி லாரியில் சோதனை செய்த போது சூரிய ஒளி படும்படியாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் கொண்டு செல்லப்பட்டனவாம். மேலும் தண்ணீர் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட கேன்கள் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் அவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மேலும் சோதனையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட கலப்பட முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 120 கிலோ கருப்பட்டி, பனங்கற்கண்டு, சில்லுகருப்பட்டி முதலியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மொத்தத்தில் சுமார் 30 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும் பதனீர் காலம் ஆரம்பமாகிவிட்டதால் அதைக் காரணம் கூறி கலப்பட முறையில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டிகள் சந்தைக்கு அதிகம் வரத்தொடங்கியுள்ளன. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் கருப்பட்டியை நன்கு சோதித்து வாங்கவேண்டும் என்று உணவுப் பாதுகாப்பு அதிகாரி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...