பழிவாங்கும் நோக்கத்துடன் அரசு செயல்படுகிறதா? - கார்த்திகா கைதுக்கு பிரேமலதா கண்டனம்!மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

ஐப்பசி மாதப் பலன்கள் - ரிஷபம்

எப்படி இருக்கும் இந்த மாதம்..

ippasi month predictions

மாதப் பலன்கள்

Updated On :

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதம், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதம்)

கிரகநிலை:

தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு - சுக ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சுக்ரன் (வ) - அஷ்டம  ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில் ராஹூ - லாப  ஸ்தானத்தில் சனி (வ) என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:

20-10-2026 அன்று குரு பகவான் அதிசாரம் பெற்று தைரிய வீரிய  ஸ்தானத்தில்  இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று ராகு பகவான் தொழில்  ஸ்தானத்தில்  இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

13-11-2026 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்தில்  இருந்து தைரிய வீரிய  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:

மற்றவர்களை அறிந்து அவர்களுக்கேற்ப நடந்து கொண்டு காரியம் சாதிக்கும் திறமை உடைய ரிஷப ராசி அன்பர்களே இந்த மாதம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எந்த ஒரு வேலையிலும் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். உங்களுடன் பக்கபலமாக ஒருவர் இருந்து தேவையான உதவிகளைச் செய்வார். நண்பர்கள் மூலம் புதிய வசதிகள் கிடைக்க பெறுவீர்கள்.

தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். புதிய ஆர்டர்கள் வருவதில் இருந்த தடைகள் விலகும். தேவையான பணவசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். புதிய பொறுப்புகளும் அதனால் வருமானமும் இருக்கும். எதிர்ப்புகள் அகலும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். பூமி மூலம் லாபம் கிடைக்கும் சகோதரர்களால் நன்மை உண்டாகும். வாழ்க்கை துணைக்கு தேவையான வசதிகள் செய்து தருவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எல்லா வகையிலும் நன்மையையும் மகிழ்ச்சியையும் தரும்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். உங்களின் திறமை பளிச்சிடும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது. 

 மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனமகிழ்ச்சி உண்டாகும். சிறப்பாக செயல்படுவீர்கள்.

 கார்த்திகை:

இந்த மாதம் கடந்தகாலத்தில் உங்களை விட்டுச் சென்றவர்கள் விரும்பிவந்து சேர்வார்கள். உறவு பலப்படும். தொலைபேசித் தொடர்பு மூலமாக சிலர் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்தி லாபம் தேடும் முயற்சியில் ஈடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. சுபநிகழ்ச்சிகள் இடம்பெறும்.

ரோகினி:

இந்த மாதம் சில அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய பணப்பற்றாக் குறையை சந்திக்கலாம். ஒரு பிரச்சினை முடிந்ததும் இன்னொரு பிரச்சினை உருவாகலாம். ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பிரச்சினைகள் எவ்வளவு இருந்தாலும் தோல்வியும் தொய்வும் இல்லாமல் சமாளித்து ஜெயிக்கலாம்.

மிருகசீரிஷம்:

இந்த மாதம் எடுத்த காரியங்களில் உடனே வெற்றி ஏற்படும். சில காரியங்களில் தாமதமாக வெற்றி ஏற்படும். உங்கள் விடாமுயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித்தரும். பழகும் நண்பர்களை எடைபோட முடியாது. வெளுத்தது எல்லாம் பால் என்று நம்பும் உங்கள் பெருந்தன்மையை கொஞ்சம் ஒதுக்கி வைக்கவும்.

பரிகாரம்: கனகதாரா ஸ்தோத்திரம் பாராயணம் செய்து வர பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும்.

சந்திராஷ்டம தினங்கள் - அக் 18; நவ 13, 14

அதிர்ஷ்ட தினங்கள் - அக் 24, 25

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.