பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் காரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சுஜான்புர் நகர்ப் பகுதியில் கார் ஓட்டுநர் துப்பாக்கி முனையில் கீழே இறக்கிவிடப்பட்டு கார் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து, பதான்கோட் மாவட்டம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. காரை கடத்தியவர்கள் பயங்கரவாதிகளா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சாலையோரம் நின்றிருந்த மூன்று பேர் காரை வழிமறித்துள்ளனர். போர்ட் பிகோ காரை ஓட்டி வந்த நபர், காரை நிறுத்தியது ஏன் என்று கேட்ட போது, அவரை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்கள், அவரிடம் இருந்து காரை பறித்துக் கொண்டுள்ளனர்.
இரண்டு பேர் காரை ஓட்டிச் சென்ற நிலையில், ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டாதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
பதான்கோட் - ஜம்மு நெடுஞ்சாலையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் சுஜான்புர் அமைந்துள்ளது.
இதே போன்றுதான், கடந்த ஜனவரி 2ம் தேதி காரை கடத்திச் சென்ற பயங்கரவாதிகள் விமானப்படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு

20 நிமிஷத்தில் 1,320 கிலோ அரிசி வேக வைக்கும் பாத்திரம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

