1950-ல், புத்தர் பிறந்த நாள் விழாவில் சிலை வடிவ வழிபாட்டுக்கு எதிராகப் பேசிய அம்பேத்கர், “புத்தர் தன்னைக் கடவுளாகக் கருதாமல் ஒரு வழிகாட்டியாகவே வாழ்ந்து காட்டினார். கிருஷ்ணனோ கடவுள்களுக்கு எல்லாம் கடவுள் நானே என்றார். ஏசு கிறிஸ்து தன்னைக் கடவுளின் மகன் என்று கூறிக்கொண்டார். முகம்மது பைகாம்பர் (நபி) தன்னை கடவுளின் கடைசித் தூதர் என்று அறிவித்துக்கொண்டார். மேற்படி 3 மத நிறுவனர்களும் தங்களை மோட்சத்துக்கு அழைத்துச்செல்லும் ஆற்றல் படைத்தவர்களாகவே காட்டிக்கொண்டனர். ஆனால், புத்தர் மட்டும்தான் சொர்க்கம் நரகம் மறுபிறவி போன்றவற்றை நம்பவில்லை. கடவுள், ஆன்மா, ஆவி போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்தார். மற்ற மதங்கள் கடவுளை வழிகாட்டிய நிலையில், புத்தர் மட்டும் நல்லொழுக்கத்தை வழிகாட்டினார். இந்து கிறிஸ்தவ முஸ்லிம் மதங்களில் கடவுள் இடம் பிடித்திருந்த இடத்தில், புத்த மதத்தில் மட்டும் நன்னெறி இடம் பிடித்திருந்தது”.