தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

கவிஞர் ஞானக்கூத்தன் மறைவு!

ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்குகள் காலை 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் உள்ள அவரது மகனது இல்லத்தில் நடைபெறும்

Updated On :28 ஜூலை 2016, 5:50 am

தமிழின் மூத்த படைப்பாளி, கவிஞர் ஞானக்கூத்தன்  இன்று இயற்கை எய்தினார்.

Story image

பொதுமக்கள் மற்றும் எழுத்தாளர்கள் அஞ்சலிசெலுத்தினர்; ஞானக்கூத்தனின் இறுதிச் சடங்குகள் காலை 10 மணி அளவில் திருவல்லிக்கேணி ஈஸ்வர தாஸ் லாலா தெருவில் உள்ள அவரது மகனது இல்லத்தில் நடைபெறும் என தகவல். தமிழ் படைப்புலகில் மிக  முக்கியமான  பங்களிப்பைச்செய்த மூத்த  எழுத்தாளர் ஞானக்கூத்தன் மறைவு இலக்கிய  உலகில் மாபெரும் இழப்பு என்று மூத்த எழுத்தாளர்கள் சா.கந்தசாமி மற்றும் பாலகுமாரன் உள்ளிட்டோர் கூறினர். சா.கந்தசாமி ஞானக்கூத்தன் பற்றி பேசுகையில் ’பிறப்பால் கன்னடரான ஞானக்கூத்தன் தமது இலக்கிய பங்களிப்பை தமிழில் தான் அளித்தார். கன்னடத்தில் அவரது பங்களிப்பு எதுவும் இருந்ததாக தான் அறிந்ததில்லை’ என்று தெரிவித்தார். பாலகுமாரன் பேசுகையில் மிகப்பெரும் கவிஞர்  தமிழ் இலக்கிய உலகில் அவரது இழப்பு ஈடு கட்ட முடியாதது என்று கூறினார். முப்பது ஆண்டுகளாக இரண்டு தலைமுறைக் கவிஞர்களுக்கு முன்னோடியாக விளங்கிய அவரது மறைவு படைப்பாளிகளைத் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.