தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

12-வது மாடி ஜன்னலில் இருந்து தவறி விழுந்து இறந்த குழந்தை!

12 வது தளத்தில் அமைந்த அந்த வீட்டின் ’ஜன்னலுக்கு கம்பித் தடுப்பு இல்லாத காரணத்தால் தான் குழந்தை தவறி விழ நேர்ந்தது, தடுப்பு இருந்திருந்தால் குழந்தை கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை’

News image
Updated On :20 ஜூலை 2016, 8:36 am

சென்னை மக்கள் மீண்டும் கேட்க விரும்பாத மற்றுமொரு துயரச்செய்தி! சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு தனியார் அபார்ட்மெண்ட்டின் 12-வது மாடி ஜன்னலில் இருந்து இரண்டரை வயது ஆண் குழந்தை ஒன்றுதவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. குழந்தை 12-வது மாடியில் உள்ள தனது வீட்டின் படுக்கையறை ஜன்னல் அருகில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. ஜன்னல் கண்ணாடிக் கதவுக்கு தடுப்பாக கிரில் கம்பி எதுவும் போடப்படாத காரணத்தால் திறந்திருந்த ஜன்னல் வழியாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக விழுந்து விட்டது. கம்பித் தடுப்புகள் இல்லாத காரணத்தால் குழந்தை 12 வது மாடியில் இருந்து கீழே விழும்போது கீழே இருக்கும் அடுக்குமாடிகளின் ஜன்னல் புறத்தில் வைக்கப்பட்ட பல ஏ.சி யூனிட்டுகளில் மோதி தரையில் விழுந்ததால் பலத்த காயத்துடன் சம்பவ உடத்திலேயே  உயிரிழந்தது.

இந்த துயரச் சம்பவத்தை நேரில் கண்ட அந்த அபார்ட்மெண்ட்வாசி ஒருவர் அதிர்ச்சியில் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துக் கொண்டு கீழ் தளத்தை நோக்கி விரையும் வரை குழந்தையின் பெற்றோருக்கு இந்த விஷயம்  தெரியவில்லை. பிறகு செய்தி அறிந்து விரைந்து வந்து குழந்தையை எடுத்துக் கொண்டு அருகில் இருந்த மருத்துவமனையை அணுகும் முன்பே குழந்தை இறந்திருந்தது. அடுக்குமாடியின் 12 வது தளத்தில் அமைந்த அந்த வீட்டின் ’ஜன்னலுக்கு கம்பித் தடுப்பு இல்லாத காரணத்தால் தான் குழந்தை தவறி விழ நேர்ந்தது, தடுப்பு இருந்திருந்தால் குழந்தை கீழே விழுந்திருக்க வாய்ப்பில்லை’ என்று அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டனர்.

அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்தச் சம்பம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் இன்னமும் வழக்குப் பதியவில்லை. குற்றவியல் நடைமுறை விதிகளின் படி இப்படி ஒரு துயரச் சம்பவத்திற்கு வழக்குப் பதிவது அவசியமானது இல்லையா? என்ற கேள்விக்கு காவல் துறை அதிகாரி கூறிய பதிலில்  'குழந்தையை இழந்து விரக்தியில் ஆழ்ந்திருக்கும் பெற்றோர் இது குறித்து புகார் அளிக்கும் மனநிலையில் இல்லை எனவும், அங்கிருந்த அபார்ட்மெண்ட் வாசிகளும் இச்சம்பவம் குறித்து புகார் எதுவும் அளிக்காததால் இதுவரை வழக்கு எதுவும் பதியப்படவில்லை என்று தெரிவித்தார். சம்பவ இடத்திலிருந்து கூப்பிடுதூரத்தில் தான்  திருவல்லிக்கேணி காவல்நிலையம் அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குப் பதிவு செய்தால் மருத்துவமனை, காவல்நிலைய நடைமுறைகள் என்று நேரவிரயத்தில் இறந்த குழந்தைக்கு இறுதிக் காரிய சடங்குகள் செய்வதில் தாமதம் ஏற்படும் என்று குழந்தையின் பெற்றோர் நினைத்திருக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.