மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

தேநீர் பிரியர்கள் கவனத்திற்கு!

டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள்,

News image
Updated On :14 ஜூலை 2016, 9:18 am

நேற்று அயனாவரத்தில் தேயிலை மொத்த வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து 2.3 டன் அளவிலான தரக்குறைவான டீத்தூள் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உணவுப் பாதுகாப்புக்கு கழக நியமன அதிகாரி ஆர்.கதிரவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

உணவுப்  பாதுகாப்புக் கழகத்தினரின் திடீர் சோதனையில் பிடிபட்ட இந்த தரம் குறைவான  டீத்தூள் பாக்கெட்டுகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் 'கிங் இன்ஸ்டிடியூட்டின்' ஆய்வு முடிவுகள் வெளிவந்ததும் காலாவதியான டீத்தூள் பாக்கெட்டுகளை விற்பனை செய்த  டீக்கடைகள் மற்றும் தேயிலை மொத்த வர்த்தக நிலையங்களின் தேயிலை விற்பனை  உரிமங்களை தேயிலை வாரியம் ரத்து செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நிறம், மணம், திடம்

டீத்தூளை பொறுத்தவரை 'நிறம், மணம், திடம்' இந்த மூன்றும் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் விஷயங்கள், எந்தக் கலப்படமும் இல்லாத டீத்தூளில் 'மணமும்,  திடமும்' ஓரளவுக்கு கிடைக்கக் கூடும், ஆனால் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கில்  தயாரிக்கப்படும் தரக்குறைவான டீத்தூளில் நிறத்துக்காக பெரும்பாலும் 'பிஸ்மார்க் பிரவுன்,பொட்டாசியம் ப்ளூ, செயற்கை மஞ்சள் தூள், இண்டிகோ' போன்ற உணவுப் பாதுகாப்பு கழகத்தால் அங்கீகரிக்கப் படாத வேதிப்பொருட்கள்  சேர்க்கப்படுகின்றன.

இந்த வேதிப்பொருட்கள் 'கல்லீரல் மற்றும் செரிமான மண்டலத்தில்' அதிக பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியவை. தொடர்ந்து இந்த தரம் குறைந்த டீத்தூளில் தயாரான டீ அருந்துபவர்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் வரலாம். எனவே தேநீர் பிரியர்கள் தாங்கள் அருந்தும் தேநீர் தரமானது தானா என்பதில் கவனமாக இருக்க  அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.