தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

நிறைவு பெற்றது மகாமகப் பெருவிழா: இயல்பு நிலைக்கு திரும்பியது கும்பகோணம்

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் தீர்த்தவாரி உற்சவம் முடிவடைந்துவிட்டதால், இன்று கும்பகோணம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

Updated On :23 பிப்ரவரி 2016, 10:49 am

கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் தீர்த்தவாரி உற்சவம் முடிவடைந்துவிட்டதால், இன்று கும்பகோணம் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.

எனினும், மகாமகக் குளத்தில் இன்றும் ஏராளமானோர் நீராடினர்.

திருவிழா நடைபெற்ற கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று தொடங்கியது.

கும்பகோணம் மகாமகப் பெருவிழா கடந்த 13-ம் தேதி தொடங்கியது.மகாமகக் குளம், பொற்றாமரைக் குளம், காவிரியாற்றில் நீராடிச் செல்பவர்கள் திருவிழா நடைபெறும் 12 சிவத் தலங்கள், 5 வைணவத் தலங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் மகாமகப் பெருவிழாவில் பங்கேற்றுள்ளதால், கோயில்களில் தற்போதுள்ள உண்டியல்களைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் தாற்காலிகமாக உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்டியல்களின் மூலம் கிடைத்தத் தொகை எவ்வளவு என்பதை கணக்கீடுவதற்காக  அருள்மிகு நாகேசுவரன், அபிமுகேசுவரர், ஆதி கும்பேசுவரர் உள்ளிட்ட சிவத்தலங்களில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடங்கியது. ஆய்வாளர் நிலையிலான அதிகாரிகள் மேற்பார்வையில் ஒவ்வொரு கோயிலிலும் 20 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

மதாமகப் பெருவிழா மூலம் கிடைத்த வருவாய் எவ்வளவு என்பது ஓரிரு நாள்களில் தெரிய வரும் என்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.