/

பல்லடம் அருகே கார்- லாரி மோதி விபத்து: 4 பேர் சாவு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்று காலை காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

News image
Updated On :9 பிப்ரவரி 2016, 6:28 am

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே இன்று காலை காரும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.

திருப்பூரில் உள்ளாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருபவர் முரளி. இவர் தனது சகோதரர் ரமேஷ் மற்றும் உறவினர்கள் பாலாஜி, விஷ்னு ஆகியோருடன் காரில் ராமேஸ்வரம் சென்றார்.

ராமேஸ்வரத்திலிருந்து இன்று அவர்கள் திருப்பூர் திரும்பினர். மூலம்பாளையம் அருகே வந்தபோது அவர்கள் வந்த கார், அப்பகுதியில் சென்ற லாரியுடன் மோதியது. இதில் காரில் பயணம் செய்த 4 பேரும் சம்பவட இடத்திலேயே இறந்தனர்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.