கன்னியாகுமரியில் இருந்து பெங்களூரு செல்லும் விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவத்தில், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து ஈரோடு வழியாக பெங்களூரு செல்லும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் (T.No 16525), வேலூா் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சோமநயக்கன்பட்டி-தச்சூர் என்ற இடத்தில் இன்று காலை 4.15 மணியளவில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய ரயிலில் பயணம் செய்த பயணிகள் பேருந்துகள் மூலம் பெங்களூரு அனுப்பி வக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளத்தில் இருந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டு மிகப்பெரிய விபத்து நேரிட்டும், நூலிழையில் பயணிகள் உயிர் தப்பியுள்ளதாக தெற்கு ரயில்வே கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி 23.4 லட்சம் காா்கள் தயாரிப்பு

இன்ஃபோசிஸ் நிகர லாபம் ரூ.8,501 கோடி

நாஸ்காம் புதிய தலைவா் நியமனம்

சென்செக்ஸ், நிஃப்டி 2-ஆவது நாளாக சரிவு!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


