திருச்சி திருவெறும்பூர் அருகே ரூ. 36 லட்சத்துடன் தலைமறைவான மகளிர் குழுத் தலைவியின் வீட்டை இன்று பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகேயுள்ள குமரேசபுரம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காதர் அலி. இவரது மனைவி இளஞ்சியம் (40). அப்பகுதியிலுள்ள 10-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்தார்.
கடந்த மே மாதம் சுயஉதவிக் குழுவில் பெண்களுக்கு தெரியாமல் அவர்களின் கையெழுத்தையிட்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ரூ. 36 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் சுய உதவிக் குழு பெண்களிடம் மாதத் தவணையை செலுத்தும்படி கேட்டுள்ளனர்.
ஆனால், அவர்கள் தாங்கள் எந்த கடனும் வாங்கவில்லை எனக் கூறியுள்ளனர். இதனால் ஊழியர்களுக்கும், சுய உதவிக்குழு பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சுய உதவிக்குழு பெண்கள் திருவெறும்பூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் அந்த நிதி நிறுவன ஊழியர்கள் சுய உதவிக் குழு பெண்களிடம் பணத்தை கட்டுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழு பெண்கள், குழுத் தலைவி இளஞ்சியத்தை பார்க்கச் சென்றபோது, அவர் வீட்டை பூட்டிவிட்டு கணவர் காதர் அலியுடன் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது.
இதையடுத்து சுய உதவிக்குழு பெண்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் போலீஸார் இதுகுறித்து விசாரித்ததில், அவர் குடியிருந்த வீடு கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது என்பதும், இந்த வீட்டை ஒருவரிடம் ரூ. 30 லட்சத்துக்கு அடமானம் வைத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து மகளிர் சுய உதவிக் குழு பெண்களிடமும், அந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.40% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

