பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், கட்சியிலே தொடருவதாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார்.
கலாமின் மறைவுக்கு பின்னர் அவரது பேரன் ஷேக் சலீம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.
இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகியதாக நேற்று ஊடகங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சலீம், தான் பாரதீய ஜனதா கட்சியிலேயே தொடர்வதாகவும், கட்சிக்காக உண்மையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த, அப்துல் கலாமின் உறவினரான செய்யது காஜா இப்ராஹிம், நேற்று கட்சியிலிருந்து விலகினார். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக காஜா இப்ராஹிம் பதவி வகித்து வந்தார்.
தில்லியில் அப்துல்கலாம் வசித்து வந்த வீட்டை, அவரது நினைவாக அறிவு மையமாக மாற்றம் செய்ய வேண்டும் என இப்ராஹிம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அந்த வீடு அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தே காஜா இப்ராஹீம் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.
காஜாவின் ராஜிநாமா செய்துள்ள நிலையில் சலீம் ராஜிநாமா செய்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

வாக்குப்பதிவில் புதிய வரலாறு! தமிழக வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் 'சல்யூட்'!

மேற்கு வங்கம்: மாலை 6 மணி வரை 91.74% வாக்குகள் பதிவு!

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


