மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

ரூ. 5 கோடி 'கோகைன்' கடத்தல்: தென் ஆப்பிரிக்க பெண் சென்னையில் கைது

சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், போதை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சென்னையில் அண்மையில் கைது செய்தனர்.

News image
Updated On :17 நவம்பர் 2015, 11:32 am

சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்தியதாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரை போதை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் (என்.சி.பி.) சென்னையில் அண்மையில் கைது செய்தனர்.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் போலீஸாருக்கு கடந்த வாரம் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து இறங்கிய தென் ஆப்பிக்கா பெண் மோல்பீ கே. லிஸி என்பவரிடம் சோதனை நடத்தினர்.

அப்போது அவரிடம் 990 கிராம் எடையுள்ள `கோகைன்' என்னும் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் ரூ. 5 கோடி மதிப்பிலான அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பிரேசில் நகரான சா போலாவிலிருந்து துபை வழியாக சென்னைக்கு வந்த போது லிஸி பிடிபட்டார்.

சென்னையில் பிடிப்பட்ட போதைப் பொருள்களில் இதுவே மிக அதிகமாகும் என என்.சி.பி. மண்டல இயக்குநர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறினார்.

சுற்றுலா விசாவில் சென்னை வந்த லிஸி போதைப் பொருளை கொடுத்துவிட்டு, மீண்டும் தென் ஆப்பிரிக்க செல்வதற்கு திட்டமிட்டிருந்தார் என்றார் சின்ஹா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.