மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

'ஸ்கைப்' மூலம் விசாரணை: மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி

இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஸ்கைப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

News image
Updated On :18 நவம்பர் 2015, 5:45 am

இராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என 'ஸ்கைப்' மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

நீதிமன்ற வரலாற்றிலேயே முதன் முறையாக ஸ்கைப் மூலம் விசாரணை நடத்திய நீதிபதி, போலீஸார் திருமணத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.

இராமநாதபுரம் அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று (நவ. 15) ஒரு திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

தேவாலய நிர்வாகத்தினருக்கும், திருமண வீட்டாருக்கும் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து, மனுதாரரின் சார்பில் வழக்கறிஞர் எம். ஜேசு, நேற்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை அணுகினார்.

வழக்கின் அவரசநிலையை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீதிபதிகள் விடுமுறையில் இருந்ததால், நிர்வாக நீதிபதியான ராமசுப்பிரமணியன், சென்னையைச் சேர்ந்த நீதிபதி எஸ் வைத்தியநாதனை 'ஸ்கைப்' மூலம் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

சென்னையில் தன்னுடைய வீட்டிலிருந்தபடியே மைரோசாஃட்டின் விடியோ சாட்டிங் இணையதள சேவையான 'ஸ்கைப்' வழியே விசாரணை நடத்திய நீதிபதி வைத்தியநாதன், அடைக்கலமாதா தேவாலயத்தில் இன்று நடைபெறும் திருமணத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். எனினும், ஆலயத்துக்கு வெளியே எவ்வித ஊர்வலமும் நடத்தகூடாது என்றார்.

முன்னதாக வழக்கு விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் அனைத்தும் 'ஸ்கேன்' செய்யப்பட்டு, இ-மெயில் மூலம் நீதிபதிக்கு அனைப்பி வைக்கப்பட்டன.

நீதிபதியின் தீர்ப்பு குறித்த தகவல்கள் இராமநாதபுரம் காவல் துறையினருக்கு வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்கு இ-மெயில் செய்யப்பட்டன.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 'ஸ்கைப்' மூலம் நடைபெற்ற முதல் விசாரணை இதுவே என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.