தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் மாரியம்மன் கோயில் திருவிழா 29-ம் தேதி கொடியேற்றம்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா வருகிற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற இருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:01 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் திருக்கோயில் பங்குனி திருவிழா வருகிற 29-ம் தேதி கொடியேற்றத்துடன் நடைபெற இருக்கிறது.

இத்திருக்கோயில் வளாகத்தில் மேற்குறிப்பிட்ட நாளில் இரவு 8.01 மணிக்கு  கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பராசகதி மாரியம்மன் பல்வேறு அலங்காரத்தில் சப்பரத்தில் நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.5-ம் தேதியும், 6-ம் தேதி கயிறு குத்துதல் மற்றும் நேர்த்திக் கடன் செலுத்தும் வகையில் அக்னிச் சட்டி எடுத்தல், 7-ம் தேதி தேரோட்ட திருவிழாவும் நடைபெறுகிறது.

இத்திருவிழாவை முன்னிட்டு ஏப்.12-ம் தேதி வரையில் மண்டகப்படிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. அதோடு அம்மன் கோவில் திடலில் திருவிழா ஒவ்வொரு நாள் இரவு இன்னிசை, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இத்திருவிழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பர். மேலும், இவ்விழாவை முன்னிட்டு 27-ம் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் ஏப்.19ம் தேதி வரையில் கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பொருட்காட்சியும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார் தேவஸ்தான நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.