தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

விருதுநகர் மாவட்டத்தில் மானாவரி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்த ரூ.1.38 கோடி ஒதுக்கீடு

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.1.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:12 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விவசாயிகள் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்துவதற்கு ரூ.1.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி  வருகிறது. அந்த வகையில் மானாவாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை மூலம் மானாவாரி ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்த்திட்டத்தின் நோக்கமே மானாவாரி விவசாயிகள் மாதந்தோறும் வருவாயை ஈட்டுவதற்கு வழிவகை செய்வதே ஆகும். இதில், பயனடைய விரும்பும் விவசாயிகளுக்கு 1 ஏக்கர் வரையில் மானாவாரி நிலம் இருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும் விவசாயிகளுக்கு பண்ணைக்குட்டைகள் அமைத்தல், பழமரக்கன்றுகள் நடுதல், ஆடுகள், கோழிகள் மற்றும் கறவை மாடுகள் ஆகியவைகளுக்கு ரூ.1 லட்சம் வரையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது. நிகழாண்டில் இத்திட்டம் செயல்படுத்துவதற்காக சாத்தூர், வெம்பகோட்டை, வத்திராயிருப்பு, காரியாபட்டி, நரிக்குடி ஆகிய ஒன்றியங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, திட்டம் செயல்படுத்தும் கிராமங்களில் மானாவாரி விவசாயிகள் குழு அமைக்கப்படும். அதன் மூலம் ஏழை எளிய விவசாய பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.சுப்பையா தெரிவித்தார்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.