திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை விவசாயிக்கு வழங்கப்பட்டது.
வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக, விவசாயிகள் ஆர்வலர் குழுவினரால் எம்.களத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை விவசாயி கே.குமார் தன்னுடைய நிலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த 7100 கிலோ மக்காச்சோளத்தை வயல்வெளியிலேயே வளையப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி செந்தில்குமாருக்கு விற்பனை செய்தார்.
கிலோ ரூ.12-க்கு என்ற அளவில் விற்பனையான மக்காச்சோளத்துக்குரிய தொகையான ரூ. 85,200 உடனடியாக வழங்கப்பட்டது.இந்த நேரடி வியாபாரி -விவசாயி விற்பனை பரிமாற்றத்துக்கு வேளாண் வணிகத் துறையின் வேளாண் உதவி அலுவலர் தொட்டியம் சரவணக்குமார்,முசிறி வேளாண்மை அலுவலர் புஷ்பாசிவகுமார், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எம்.களத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட விவசாயிகள் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு, குழு மூலம் முதன்முறையாக வயல்வெளியில் நேரடியாக மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டுள்ளது நல்ல பலனைத் தந்துள்ளது என்று திருச்சி வேளாண் வணிகத் துணை இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


