எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகர் மாவட்டத்தில் ஆடிப்பட்ட விதைப்புக்காக மழையை எதிர்பார்த்துள்ள மானாவாரி விவசாயிகள்

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:03 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் மானாவாரி விளைநிலங்களில் ஆடிப்பட்ட விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் 1.27 லட்சம் ஹெக்டேரில் பம்ப்செட் மற்றும் மானாவாரி விளைநிலங்களில் விவசாய பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, ஆடிப்பட்டம் என்பதால் விவசாயிகள் விதைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு விளைநிலங்களை உழவு செய்து தயார் நிலையில் வைத்துள்ளனர். இப்பட்டத்தில் தான் தானியப் பயிர்களான கம்பு, சோளம், தினை, குதிரைவாலி,
கேழ்வரகு உள்ளிட்ட பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏற்ற பருவமாகும். அதோடு, விவசாயிகள் எதிர்பார்க்கிற தானிய விளைச்சளும் அதிகமாக கிடைக்கும். அதனால், ஆடிப்பட்டத்தில் விதைப்பு பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் விரும்புகின்றனர்.

இதற்காக கடந்த மாதமே விளைநிலங்களில் நன்றாக உழவு செய்து பாரமரிப்பு பணிகள் செய்து சமமாக வைத்துள்ளனர். இப்பகுதியில், கோடை மழை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்தது. அதையடுத்து, இடையிடையே பரவலான சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் விதைப்பு பணிகளை மேற்கொள்ள முடியாத சூழல்

உள்ளது.     இந்நிலையில், நிகழாண்டிற்கு மானாவாரி மற்றும் பம்ப்செட் விவசாயத்தில் நெல் பயிர் 31 ஆயிரம் ஹெக்டேரிலும், 52500 ஹெக்டேரில் மக்காச்சோளம், சோளம், கம்பு, குதிரைவாலி உள்ளிட்ட தானியப் பயிர்களும், பயறு வகைகள் 12200 ஹேக்டேரிலும், எண்ணைய் வித்து பயிர்கள் 6400 ஹெக்டேரிலும், கரும்பு 2900 ஹேக்டேரிலும், பருத்தி 12900 ஹெக்டேரிலும் சாகுபடி செய்வதற்கு வேளாண்மை துறையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் பம்ப்செட் விவசாயத்தில் சூரியகாந்தி, கடலை, கரும்பு, எள் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் 18 ஆயிரம் ஹெக்டேரிலும் பயிரிடப்பட்டுள்ளது. மானாவாரி விவசாயத்தில் தானியப்பயிர்கள் மற்றும் பயறு வகைகள் விதைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு மழையை எதிர்பார்த்து இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து வேளாண்மை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்வதற்கு 1.15 லட்சம் ஹெக்டேரில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் விதைப்பு பணிகள் மேற்கொள்ளும் அளவிற்கு மழை பெய்யவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் கோடை மழை 88.84 மி.மீ, மே மாதம் 114.88 மி.மீ அளவு பெய்துள்ளது. இதுவரையில் 231 மி.மீ என்ற அளவைவிட கூடுதலாக 266 மி.மீட்டர் பெய்துள்ளது. ஆனால், மானாவாரி விளைநிலங்களில் ஈரப்பததன்மை இல்லாத காரணத்தாலும், ஆடிப்பெருக்குக்கு பின் மழை பெய்யும் என விவசாயிகளிடையே எதிர்பார்ப்பு இருப்பதால், அதைத் தொடர்ந்து விதைப்பு பணிகள் தொடங்கும் நிலையிருக்கிறது.

தற்போது, ஜூனில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதிகளில் பரவலாக பெய்துள்ளதால் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சேத்தூர் வட்டார பகுதிகளில் பம்ப்செட் விவசாய பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும்  தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.