எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம், கண்டன ஊர்வலம்

தனியார் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1500 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலமும்  புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:02 am

எஸ். பாண்டியன்

தனியார் நிதிநிறுவனம் பொதுமக்களிடம் வசூலித்த ரூ.1500 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன ஊர்வலமும்  புதன்கிழமை நடைபெற்றது.

   விருதுநகர் தேசபந்து மைதானத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தி.ராமசாமி தலைமை வகித்தார். மாநில நிர்வாக குழு உறுப்பினரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான வி.அழகிரிசாமி, முன்னாள் மக்களவை உறுப்பினர் பி.லிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் வி.பொன்னுப்பாண்டியன், மாநில குழுவைச் சேர்ந்த எஸ்.சமுத்திரம் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், வட்டார செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பி.ஏ.சி.எல் தனியார் நிதி நிறுவனம் விருதுநகர் கிளையில் செலுத்திய ரூ.1500 கோடியை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக லாபத்துடன் வழங்கவும், இந்நிறுவனத்தின் முகவர்கள் நெருக்கடியில் உள்ளதால் சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர்.சிலையிலிருந்து பஜார், தெப்பக்குளம், ராமமூர்த்தி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பி.எ.சி.எல் நிறுவனம் வரையில் கண்டன ஊர்வலமும் நடத்தினர். இதில், இந்நிறுவனத்தின் முகவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.