திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை

விருதுநகர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:00 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் சனிக்கிழமை நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விருதுநகரில் கல்பள்ளி வசாலில் தலைவர் ஜாபரூல்லா தலைமையிலும், பெரிய பள்ளிவாசலில் தலைவர் முகமது எகியா தலைமையிலும், தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் உமர் அலி தலைமையில் நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளி மைதானத்திலும் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இப்பண்டிகை சிறப்புத் தொழுகையில் பொதுமக்கள் அனைவரும் அமைதியாகவும், மதநல்லிணக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, தொழுகை முடிந்து வெளியேறி வந்ததும் முஸ்லீம்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி இனிப்புகளை வழங்கி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அதற்கு முன்னதாக நோன்பு திருநாளை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடை மற்றும் பல்வேறு பொருள்கள் தர்மம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

இப்பண்டிகையை முன்னிட்டு பள்ளி வாசல்களில் பல்வேறு வண்ணவிளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், நோன்பு திருநாளை முன்னிட்டு 30 நாள்கள் வரையில் முஸ்லீம்கள் காலை முதல் மாலை வரையில் கடும் நோன்பு மேற்கொண்டு, தொழுகையிலும் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், விருதுநகரை அடுத்த ஆவுடையாபுரம், ஆர்.ஆர்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இத்தொழுகைக்கான ஏற்பாடுகளை அந்தந்த பகுதி பள்ளிவாசல்களைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.