திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

விருதுநகரில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 25 பேர் கைது

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 25 பேரை வெள்ளிக்கிழை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:57 am

எஸ். பாண்டியன்

பூரண மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி அரசு மதுபானக்கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் 25 பேரை வெள்ளிக்கிழை போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே மதுபானக் கடை முன்பு நடந்த  போராட்டத்திற்கு நகரத் தலைவர் பொன்ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், மதுரை கோட்ட அமைப்புச் செயலாளர் அழகர்சாமி கண்டன உரை நிகழ்த்தி பேசுகையில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் மதுவுக்கு அடிமையாகி வருகின்றனர்.

இதனால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், அதனால் பூரண மதுவிலக்கை அமுல்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார். அதைத் தொடர்ந்து கோஷமிட்டு கொண்டே பழைய பேருந்து நிலையம் முன்பு உள்ள மதுபானக்கடைையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனே அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மேற்கு காவல் நிலைய போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட அக்கட்சியினர் 25 பேரை கைது செய்து தனியார் அரங்கத்தில் சிறை வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.