நெல் ரகங்களின் வயதுக்கேற்ப பயிர் அறுவடையை உரிய காலத்தில் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், நெல் கதிரின் மணிகள் 80 சதவீதம் மஞ்சள் நிறமாக மாறி இருந்தால் மட்டுமே அறுவடை மேற்கொள்ளலாம். இதுபோன்ற காரணங்களால் விளைநிலங்களில் நெல் உதிர்வதை தடுக்க முடியும். அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் 19 சதவீதம முதல் 23 சதவீதம் இருப்பது அவசியம். எனவே முதிர்ந்த நெல் மணிகளின் அரிசி கடுமையானதாகவும், உறுதியாகவும் இருக்கும். அறுவடைக்கு பின் நன்றாக சுத்தம் செய்வதோடு, அதிக சூரிய வெப்பத்திலும் உலர்த்தக் கூடாது. காயவைத்த நெல்லின் ஈரப்பதம் 12 சதவீதத்திற்குள் இருத்தல் வேண்டும். அதிக ஈரப்பதத்தோடு சேமித்து வைத்தால் பூஞ்சாண வித்துக்கள் பரவுவதோடு நெல்லின் தரமும் பாதிக்கும்.