மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வதோடு, பட்டத்தை வைத்து வாழ்க்கை தரத்தையும் உயர்த்திக்கொள்ள வேண்டும். இப்பட்டம் பெற்றதோடு நின்றுவிடாமல் தொடர்ந்து படித்து அறிவை பெறுக்கிக் கொள்வதன் மூலமே சமுதாயத்தில் மதிக்கப்படுவர். இவ்வுலகின் அறிவியல், அரசியல், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் நிறைந்த சூழ்நிலைகள் விரைவாக மாறி வருகின்றன. இம்மாற்றத்திற்கு தன்னை தயார்படுத்தும் கலையினை கற்றுக் கொண்டால் மட்டுமே கல்வியில் பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் தங்கள் முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரை மறக்காமல் இருக்க மாணவ, மாணவிகளை அவர் கேட்டுக் கொண்டார். அதையடுத்து இந்த விழாவில் மாணவ, மாணவிகளுக்கு துணைவேந்தர் இளநிலை, முதுநிலை பட்டங்களை வழங்கினார்.