தமிழக வருவாய்த்துறை வரலாற்றில் முதல் முறையாக, கிராம உதவியாளர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பதவி உயர்வு அளிப்பதற்காக தகுதியானவர்கள் பட்டியல் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் தயாரிக்கப்பட்டு வருகிறது.
கிராமங்களில் பகுதி நேர ஊழியர்களாகப் பணியாற்றிய கிராம உதவியாளர்கள் 1995- இல் முழுநேர அரசுப் பணியாளர்களாக்கப்பட்டனர். வருவாய்த் துறையில் கிராம உதவியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பணியில் சேருவோர் மட்டுமே எவ்வித பதவி உயர்வும் பெறாமல் இருந்தனர்.
2010-இல் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் தொடர்ந்து பணி முடித்த கிராம உதவியாளர்களை தகுதியின் அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 10 சதவீத இடங்களுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த பதவி உயர்வு பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.
தற்போது, கிராம நிர்வாக அலுவலர்களாக பதவி உயர்வு வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு அதைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களில் ஏற்படும் காலியிடங்களில் 20 சதவீத பணியிடங்களை பணிமாற்றம் மூலம் கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்களுக்குத் தகுதியான கிராம உதவியாளர்கள் இல்லாத நிலையில், அப்பணியிடங்களை நேரடி நியமனத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம் என அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலும் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 10 ஆண்டுகள் பணி முடித்த, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கிராம உதவியாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் 5-லிருந்து 10 கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வில் கிராம நிர்வாக அலுவலர்களாகப் பதவி உயர்வு பெற வாய்ப்பு உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் பதவி உயர்வு உத்தரவுகள் வழங்கப்பட உள்ளது என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு! - நேரலை!

மேற்கு வங்கத்தில் யாராலும் ஊடுருவ முடியாது: அமித் ஷா

ஆயுஷ் மாத்ரேவுக்கு மாற்று வீரர் அறிவிப்பு!
ஜனநாயகக் கடமையில் அரசியல் தலைவர்கள்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

