/

இலங்கையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் காவல் நீட்டிப்பு

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:51 am

PTI

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 16 பேரின் காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றங்கள் இன்று உத்தரவிட்டுள்ளன.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த நவம்பர் 26 ஆம் தேதி சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இவர்களின் நீதிமன்ற காவலை டிசம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்ற நீதிபதி அலெக்ஸ் கிரேஸ் இன்று உத்தரவிட்டார்.

இதேபோல காரைக்காலிலிருந்து சென்ற மீனவர்கள் டிசம்பர் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களின் நீதிமன்ற காவலை ஜனவரி 4 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி சுப்பிரமணி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.