திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு ஆபத்து: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது குறித்து பயந்துவிடமாட்டோம் என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:50 am

ஜெயப்பாண்டி

நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது குறித்து பயந்துவிடமாட்டோம் என அக்கட்சியின் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

நேஷனல் ஹெரால்டு பிரச்னையில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் நேரில் ஆஜராகும்படி புதுதில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசு பழிவாங்கும் நோக்கில் செயல்படுவதாக கூறி மதுரை ஓபுளாபடித்துறையில் சனிக்கிழமை கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: நாட்டுக்காக நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் பல தியாகங்களைச் செய்துள்ளனர். ஆனால், தற்போது நேஷனல் ஹெரால்டு பிரச்னையால் காங்கிரஸுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதைக் கண்டு காங்கிரஸார் பயந்துவிடமாட்டார்கள்.

பிரதமர் நரேந்திரமோடி வெற்றி பெற்று நாட்டுக்கு நல்லது செய்வதை விட்டுவிட்டு காங்கிரஸைப் பழிவாங்கும் போக்கில் செயல்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் ஜவஹர்லால் நேரு. நாட்டில் ஜனநாயகத்தை காக்க உயிர்துறந்தவர் இந்திரா. தீவிரவாதத்தை எதிர்த்து உயர்நீத்தவர் ராஜீவ்காந்தி. உலகில் இந்தியா தலைநிமிரப்பாடுபட்ட காங்கிரஸ் குடும்பத்தை பழிவாங்குவது சரியல்ல என்று கூறினார்.

மத்திய அரசு மற்றும் சுப்பிரமணியசுவாமியைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.