/

சிம்புவுக்கு வழங்கப்பட்ட சம்மனுக்கு தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

பீப்-பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிரூத் ஆகியோருக்கு வழங்கபட்ட சம்மனுக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2015, 3:49 pm

பீப்-பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு மற்றும் இசை அமைப்பாளர் அனிரூத் ஆகியோருக்கு வழங்கபட்ட சம்மனுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இசை அமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இசையில் தமிழ் நடிகர் சிம்பு என்ற சிலம்பரசன் பாடியதாக ஒரு பீப்-பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பெண்களை மிகவும் தரகுறைவாக விமர்ச்சித்து அப்பாடல் வரிகள் இடம் பெற்றதாக கூறி பல்வேறு பெண்கள் அமைப்புகளும், மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோயமுத்தூர் ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் சிம்பு, அனிருத் ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டது. புகாரை பதிவு செய்த போலீஸார் சிம்பு, அனிருத் ஆகியோர் வருகிற 19 ஆம் தேதி காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இந்த சம்மனை ரத்து செய்ய வலியுறுத்தி சிம்பு, அனிருத் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுப்பையா, இருவருக்கும் கோவை போலீஸார் வழங்கிய சம்மனை ரத்து செய்வதற்கு மறுத்துவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை ஜனவரி 5 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.