ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடும் தனியார்: பாதுகாப்பு கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2015, 10:23 am

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் தனியார்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரணைக்கு வருகிறது.

அவர் தாக்கல் செய்துள்ள மனு விவரம்:

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜெமினி அருகேயுள்ள செவித்திறன் குறைவுற்றோர் பள்ளிக்கு நிவாரணப் பொருள்கள் வழங்குவதற்காக டிசம்பர் 3 ஆம் தேதி சென்றோம். அப்போது அங்கு வந்த குண்டர்கள் எங்களை தடுத்ததோடு, நிவாரணப் பொருள்களை தங்களிடம் வழங்கிட்டு செல்லுமாறு மிரட்டினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லா நிலையில், கைவசம் உள்ள நிவாரணப் பொருள்களை யாருக்கு வழங்குவது என தெரியாமல் உள்ளனர் தன்னார்வலர்கள்.

அரசு தரப்பில் வழிகாட்டுவதற்கும், உத்தரவிடுவதற்கும் யாருமே இல்லை. எனவே, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒரு சிறிய அளவிலான வெள்ள நிவாரணக் குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாஷ் வலியுறுத்திய நிலையில் நீதிபதி எம்.எம். சுந்தரேஷ்  நாளை விசாரிக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.