மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமாபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையால், வீட்டை விட்டு வெளியேற முடியவில்லை.
அப்போது மீட்பு பணியிலிருந்த இந்திய விமானப்படையின் 'சீட்டா' என்ற ஹெலிகாப்டர் மூலம் டிசம்பர் 2 ஆம் தேதி மீட்கப்பட்ட தீப்தி முதலில் தாம்பரம் விமான மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மேலும், மழை வெள்ளத்தால் அவரது மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் சேதமடைந்தன.
இதையடுத்து அவர் ஏற்கெனவே மருத்துவ சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையின் கணினியில் இருந்த ஆவணங்கள் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருநாள்களுக்குப் பிறகு, அதாவது டிசம்பர் 4 ஆம் தேதி அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.
தீப்தி விமானப்படையினார் மீட்கப்பட்டபோது அவரது கணவர் கார்த்திக் பணி நிமித்தமாக பெங்களூரூ சென்றிருந்தார்.
எங்களுக்கு பிறந்துள்ள இரட்டை தேவதைகளை கண்ட போது, எங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை எல்லாம் மறந்துவிட்டோம். இப்போது அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளோம். சரியான நேரத்தில் எங்களுக்கு உதவிய இந்திய விமானப்படை அதிகாரிகள் அனைவருக்கும் உரிய நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.
தீப்தி தவிர, மேலும் மூன்று கர்ப்பிணி பெண்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். கிண்டி அருகேயுள்ள மெடும்பாக்கத்திலிருந்து சுகன்யா (29) என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் தனது 3 வயது மகனுடன் மீட்கப்பட்டார்.
எங்களது அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளம் வரை தண்ணீர் வந்துவிட்டால் நாங்கள் நான்காவது மாடிக்கு குடிப்பெயர்ந்தோம். விமானப் படையினர் எங்களை மீட்கும் வரை, எங்களுக்கு உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை என்றார் சுகன்யா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக கூட்டணி 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்: ஓபிஎஸ்

பேருந்து சேவை இல்லாததால் பயணிகள் சாலை மறியல்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மகரம்
இன்றைய ராசி பலன் (24.04.2026) - மிதுனம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


