ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சென்னை வெள்ளம்: வான்வழி மீட்பு நிறுத்தம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2015, 3:01 pm

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகரில் வான்வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து மீட்பு பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து மேற்கொண்டு எந்தவித உத்தரவும் இல்லாததாலும், மழை, வெள்ளம் வடிந்து வருவதாலும் வான் வழியாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நிவாரணப் பணிகளும் நேற்று மாலையுடன் நிறுத்தப்பட்டுள்ளது என இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுவரை சுமார் 1,500 பேர் வான்வழியாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், 400 மாணவ, மாணவிகள் இங்கிருந்து மீட்கப்பட்டு தில்லி மற்றும் ஹைதராபாத் நகரில் இறக்கிவிடப்பட்டனர்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்கள் அனைத்தும் தாம்பரத்தை மையமாக கொண்டு மீட்பு பணிகளை மேற்கொண்டன. மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து ஹெலிகாப்டர்களும் மீண்டும் தங்களுக்கு இடங்களுக்கு திரும்பிவிட்டன.

அரக்கோணத்தில் கடற்படைக்கு சொந்தமான விமான தளத்திலிருந்து இன்று காலை ஒரு பயணிகள் விமானம் ஹைதரபாத்துக்கு 50 பயணிகளுடன் இயக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.