காவல்நிலையத்தில் உட்கார நாற்காலி தந்தனர்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
காவல்நிலையத்தில் வந்து கையெழுத்திட்ட தனக்கு போதிய பாதுகாப்பும், காவல்நிலையத்துக்குள் உட்கார நாற்காலியும் தந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.


காவல்நிலையத்தில் வந்து கையெழுத்திட்ட தனக்கு போதிய பாதுகாப்பும், காவல்நிலையத்துக்குள் உட்கார நாற்காலியும் தந்ததாக தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
சத்தியமூர்த்தி பவன் முன்னாள் ஊழியர் வளர்மதி அளித்த புகார் அடிப்படையிலான வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், மதுரையில் தங்கி தல்லாகுளம் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
வெள்ளிக்கிழமை இரண்டாவது நாளாக தல்லாகுளம் காவல் நிலையத்துக்கு 35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் கட்சியினருடன் ஊர்வலம் போல வந்த அவர் காலை 10.06 மணிக்கு காவல் நிலையத்துக்குள் சென்றார். அவருடன் கட்சி பிரமுகர்கள் ராஜசேகரன், வழக்குரைஞர் நீதிராஜன்,ஜெரோம் ஆகியோர் சென்றனர்.
காலை 10.10 மணிக்கு காவல் நிலையத்துக்கு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்று போலீஸ் பாதுகாப்பு நன்றாக இருந்தது. காவல் நிலையத்துக்குள் உட்காரவும் நாற்காலி தந்தனர். வியாழக்கிழமை எங்கள் வாகனம் மீது முட்டை, கல் வீசப்பட்டது. இதுகுறித்து புகார்கள் அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...