மதுரை காவல் நிலையத்திற்கு நடந்து வந்து கையெழுத்திட்ட இளங்கோவன்
நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ஆதரவாளருடன் நடந்துவந்து வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.


நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு ஆதரவாளருடன் நடந்துவந்து வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.
முன்னதாக அவரைக் கண்டித்து அதிமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் பணிபுரிந்த வளர்மதி அளித்த புகாரின் பேரில் மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாராயணன் ஆகியோர் மீது சென்னையில் வழக்குப்பதியப்பட்டது.
வழக்கில் இளங்கோவன், நாராயணனுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி, மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்திடுமாறு உத்தரவிட்டது.
புதன்கிழமை இரவு விமானம் மூலம் மதுரை வந்த இளங்கோவன் கோச்சடை தனியார் விடுதியில் தங்கினார்.
இன்று காலை, பீபீகுளம் சாலை வழியாக வந்த இளங்கோவன் கார் வல்லபாய் சாலையில் மறைந்த பி.டி.ஆர். வீடு அருகே நிறுத்தப்பட்டது. அங்கிருந்து மதுரை காங்கிரஸ் தலைவர் அன்னபூர்ணா தங்கராஜ் உள்ளிட்ட தனது ஆதரவாளருடன் இளங்கோவன் காவல் நிலையத்துக்கு நடந்துவந்தார்.
தல்லாகுளம் பகுதியில் அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டு வந்து இளங்கோவனுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த நிலையில், தல்லாகுளம் காவல் நிலையத்திற்குள் சென்ற இளங்கோவன் ஆய்வாளர் சந்திரசேகர் முன்பு 11.05 மணிக்கு நின்றபடி கையெழுத்திட்டார்.
முன்னதாக காங்கிரஸைச் சேர்ந்த நாராயணன் காலை 10.30 மணிக்கே கையெழுத்திட்டுச் சென்றிருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...