டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

சாலையோரம் பழுதாகி நின்றிருந்த டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி 3 பேர் சாவு

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே சாலையோரம் பழுதாகி நின்றிருந்த டிப்பர் லாரி மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து மோதியதில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:26 am

கே.​ தர்மராஜ்

பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே சாலையோரம் பழுதாகி நின்றிருந்த டிப்பர் லாரி மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ஆம்னி பேருந்து மோதியதில் ஓட்டுநர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

மதுரையிலிருந்து சென்னை நோக்கி 5 பயணிகளுடன் ஆம்னி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தை தேனியை சேர்ந்த கோபால் (42) ஓட்டினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், சின்னாறு அருகே வெள்ளிக்கிழமை அதிகாலை வந்தபோது பேருந்தின் முன்புற டயர் வெடித்து. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் பழுதாகி நின்றுகொண்டிருந்த டிப்பர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

   இதில், பேருந்து ஓட்டுநர் கோபால் (42), கிளினர் அரவிந்த் (24) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் அமுதன் (36), சென்னை ஆவடியை சேர்ந்த முத்துராஜ் (44), ஆம்னி பேருந்தின் மற்றொரு ஓட்டுநர் மதுரை கீரனூரை சேர்ந்த சுப்ரமணியன் (63) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.

   தகவலறிந்த மங்கலமேடு போலீஸôர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்குள்ளானவர்களை மீட்டு, பெரம்பலூர் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததில், சுப்ரமணி அங்கு உயிரிழந்தார்.

  தீவிர சிகிச்சைக்காக அமுதன் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மங்கலமேடு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமரன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.