தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி வெட்டுவெந்நியில் திமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில்

News image
Updated On :10 ஆகஸ்ட் 2015, 9:22 am

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி குமரி மேற்கு மாவட்ட திமுக சார்பில் மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்துக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் த. மனோ தங்கராஜ் தலைமை வகித்துப் பேசினார். இதில் பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் புஷ்பலீலா ஆல்பன், முன்னாள் அமைச்சர் கு. லாரன்ஸ், கட்சியின் குழித்துறை நகர செயலர் பொன். ஆசைத்தம்பி, மேல்புறம் ஒன்றிய அவைத் தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர், முன்சிறை ஒன்றிய செயலர் பொன். ஜீவராஜ், கட்சி நிர்வாகிகள் எஸ்.ஆர். சினி, மனோன்மணி, அப்துல் ரகுமான், குழித்துறை நகர்மன்ற கவுன்சிலர் ஷெர்லி நெல்சன் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சசிபெருமாள் மரணத்தை கொச்சைப்படுத்தி பேசிவரும் அமைச்சர் பதவி விலக வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.