/

திருச்சுழியில் செல்போன் அங்காடியில் நள்ளிரவில் தீ விபத்து

திருச்சுழியில் செல்போன் அங்காடி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உள்ளிட்ட மின் சாதன பொருள்கள் எரிந்து நாசமானது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:15 am

எஸ். பாண்டியன்

திருச்சுழியில் செல்போன் அங்காடி ஒன்றில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகள் உள்ளிட்ட மின் சாதன பொருள்கள் எரிந்து நாசமானது.

திருச்சுழி அருகே காத்தவாடி கிராமத்தைச் சேர்ந்த பொன்ராஜின் மகன் சக்தி என்ற ஜெயகிருஷ்ணன்(25). இவர் திருச்சுழி கடை வீதியில் செல்போன் மற்றும் மடிக்கணினி பழுது நீக்கும் அங்காடி நடத்தி வருகிறார். இவர் திங்கள்கிழமை வழக்கம் போல் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு கிராமத்திற்கு சென்றாராம்.

இந்நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு கடை உரிமையாளரிடம் இருந்து அங்காடி தீப்பிடித்து எரிவதாக கைப்பேசியில் ஜெயகிருஷ்ணனுக்கு தகவல் வந்ததுள்ளது. அதைத் தொடர்ந்து உடனே கிராமத்திலிருந்து வந்து அங்காடியை திறந்து பார்க்கையில் உள்ளே பல்வேறு வகையான கைப்பேசிகள், மடிக்கணினிகள், சார்ஜர் மற்றும் அதை பழுது நீக்குவதற்கான மின்சாதன பொருள்கள் என அனைத்து பொருள்களும் தீயில் கருகி நாசமானது. இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இது தொடர்பாக திருச்சுழி காவல் நிலையத்தில் சக்தி என்ற ஜெயகிருஷ்ணன் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீ விபத்து நடந்தது தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.