/

சூலக்கரை பகுதியில் 25-ம் தேதி மின்தடை

விருதுநகர் மின்கோட்டத்தைச் சேர்ந்த சூலக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(சனிக்கிழமை) மின் தடை செய்யப்பட இருப்பதாக

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:13 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மின்கோட்டத்தைச் சேர்ந்த சூலக்கரை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(சனிக்கிழமை) மின் தடை செய்யப்பட இருப்பதாக செயற்பொறியாளர் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செவ்வாய்கிழமை அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சூலக்கரை துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களான சூலக்கரை, ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவலர் குடியிருப்பு வளாகம், அழகாபுரி, மீசலூர், செவலூர், தாதம்பட்டி, கூரைக்குண்டு, தொழிற்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மேற்குறிப்பிட்ட நாளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.