அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

இளவயது திருமணங்களால் தான் கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படுகிறது: மகப்பேறு மருத்துவர் மலர்விழி

இந்த முகாமிற்கு வட்டாட்சியர் சிவஜோதி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில், விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மலர்விழி பேசுகையில், இளவயது

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:30 am

எஸ். பாண்டியன்

இளவயது திருணங்களால் தான் கர்ப்பவாய் புற்றுநோய் ஏற்படுவதாக அரசு மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மலர்விழி தெரிவி்த்தார்.

விருதுநகரில் சைல்டு லைன் அமைப்பு சார்பில் சிறுமி திருமணங்கள் தடுப்பு தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வட்டாட்சியர் சிவஜோதி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். இதில், விருதுநகர் மாவட்ட தலைமை மருத்துவமனையின் மகப்பேறு மருத்துவர் மலர்விழி பேசுகையில், இளவயது திருமணங்களால் சிறுமிகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற திருமணங்களால் கர்ப்பவாய் புற்று நோய் வருவதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனால் குறிப்பிட்ட வயதிற்கு பின்னரே பெற்றோர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வட்டாட்சியர் சிவஜோதி பேசுகையில், கிராமங்களில் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணங்களாலும், சமூக பாதுகாப்பு கருதியே பெற்றோர்கள் குறிப்பிட்ட வயதை அடையாத நிலையில் சிறுமிகளுக்கு திருமணத்தை நடத்தி வைக்கின்றனர். இதுபோன்று திருமணங்கள் நடத்தப்படுவது தெரிந்தால் உடனே வருவாய் அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும். அதோடு, சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைப்பதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், சட்ட விதிமுறைகள் குறித்தும் பெற்றோர்களுக்கு எடுத்துரைக்கவும் வேண்டும் என்றார்.

இதேபோல், சைல்டு லைன் திட்ட இயக்குநர் ஜான் தேவாரம் சிறுமிகள் திருமண தடு்பபு சட்டம்-2006 என்ற தலைப்பிலும், சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் சிறுமிகள் திருமணங்கள் தடுத்து நிறுத்துவதில் வருவாய்த்துறை-பொதுமக்கள்  பிரதிநிதிகளின் பங்கு என்ற தலைப்பிலும், குழந்தை தொழிலாளர்கள் திட்ட அலுவலர் நாராயணசாமி குழந்தை தொழிலாளர்கள் தடுப்பு முறை என்ற தலைப்பிலும் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

இதில், வட்டாட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், மகளிர் ஆள்கடத்தல் தடுப்பு காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சைல்டு லைன் அமைப்பு மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் லதா ஆகியோர் செய்திருந்தனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.