திருமாவளவன் மீதான வழக்கு: ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திருமாவளவன் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


திருமாவளவன் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1-6-2000-ம் அன்று புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இப் பேருந்து லிங்காரெட்டிப்பாளையம் என்ற இடத்தின் அருகே வரும்போது விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் பேருந்தை வழிமறித்து தீ வைத்து கொளுத்தினர். நடத்துனர் ஆறுமுகத்தையும் தாக்கினர்.
இது குறித்து வளவனூர் போலீஸிர் புகார் செய்யப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக திருமாவளவன் உள்பட 18 பேர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்தனர். இவ் வழக்கு விழுப்புரம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
நீதிபதி சாந்தி முன்னிலையில் இவ் வழக்கு விசாரணைக்கு வந்தது. இவ் வழக்கில் 10 பேர் மட்டுமே ஆஜராயினர். இதனைத் தொடர்ந்து இவ் வழக்கு விசாரணையை வரும் 2-ம் தேதி ஒத்திவைத்து நீதிபதி சாந்தி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...