தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

தவணை முறையில் மனை தருவதாக மோசடி: சேலம் மாவட்ட ஆட்சியரிடம் புகார்

தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சேலம் மாவட்ட

Updated On :5 ஜூன் 2014, 2:25 pm

தவணை முறையில் பணம் செலுத்தினால் வீட்டு மனை தருவதாகக் கூறி பணம் பெற்றுக் கொண்டு ஏமாற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் மீது சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 இது குறித்து ஓமலூர் அருகேயுள்ள தின்னப்பட்டியைச் சேர்ந்த ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனு விவரம்:

சேலம் மாவட்டம் சரக்கப்பிள்ளையூரைச் சேர்ந்த செல்வராஜ், பள்ளப்பட்டியைச் சேர்ந்த தனஞ்செயன் இருவரும் ஓமலூர் பேருந்து நிலையம் அருகே ரியல் எஸ்டேட் நிறுவனம் அமைத்து தவணை முறையில் பணம் வசூலித்து வந்தனர்.

 தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதியில் நிலம் கொடுப்பதாகக் கூறியதை அடுத்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலும் ரூ.2.70 லட்சம் கட்டியிருந்தோம். இதையடுத்து நிலம் கிரயம் செய்யச் சொல்லி செல்வராஜ், தனஞ்செயனிடம் சென்று கேட்டபோது, ஏற்கெனவே காட்டிய இடத்தை விட்டு விட்டு தொலைவில் இருந்த கரட்டுப் பகுதியைக் காட்டினர்.

 இதையடுத்து பணத்தை திருப்பிக் கேட்டதற்கு ரூ.1.02 லட்சம் மட்டுமே கொடுத்தனர். மீதி பணத்தை வட்டி போட்டி ஏப்ரல் 22-ம் தேதி தருவதாகச் சொன்னார்கள். ஆனால் குறிப்பிட்ட தேதியில் சென்று கேட்டபோது, பணம் கொடுக்க முடியாது என்று மிரட்டுவதுடன் கொலை செய்து விடுவதாகவும் கூறுகின்றனர்.

 இது போல் பலரிடமும் அவர்கள் மோசடி செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.