தூத்துக்குடியில் குவியும் ஆஸ்திரேலிய நாட்டுப் பறவைகள்
அலையாத்திக் காடுகள் நிறைந்த தூத்துக்குடி இனிகோநகர் கடல் பகுதிக்கு ஆஸ்திரேலியவில் உள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன.


அலையாத்திக் காடுகள் நிறைந்த தூத்துக்குடி இனிகோநகர் கடல் பகுதிக்கு ஆஸ்திரேலியவில் உள்ள மஞ்சள் மூக்கு நாரை பறவைகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன.
மன்னார் வளைகுடா பகுதி கடற்கரைகளில் மிக நெருக்கமான அலையாத்தி காடுகள் அதிகம் உள்ளதாகக் காணப்படும் தூத்துக்குடி இனிகோநகர் பகுதியில் இயற்கையாகவே ஏராளமான செடிகள் உள்ளன.
இக் கடற்கரை பகுதிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பிலிருந்து வெளிநாட்டுப் பறவைகளின் வரத்து அதிகமாகத் தொடங்கியது.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த (டஅஐசபஉஈ நபஞதஓ) என அழைக்கப்படும் மஞ்சள் மூக்கு நாரைகள் ஏராளமாக வந்துள்ளன.
இந்தப் பறவையின் அலகு மஞ்சள் நிறத்தில் நீண்டும், நுனி சிறிது கீழ்நோக்கி வளைந்தும் காணப்படுகிறது. சிறகின் நுனியில் நீண்ட ஊதா நிறச் சிறகுகள் காணப்படும். இதன் நாக்கு பனங்கிழங்கின் உள்குருத்து போன்றிருக்கும். இதன் முகமும், தலையின் முன்பகுதியும் இறகுகளற்று காணப்படும். இவை எங்கெல்லாம் வாழும் சூழ்நிலை காணப்படுகிறதோ அங்குச் சென்று இரை தேடும் வகையைக் கொண்டவை.
நடந்துசெல்ல வசதியாக இறகுகளற்ற நீண்ட கால்கள், முன்னால் மூன்று விரல்களுடனும், பின்னால் ஒரு விரலுடனும் காணப்படுகின்றன. விரலிடைச் சவ்வு தேய்ந்து காணப்படுகிறது. இவற்றின் சிறகுகள் மிகவும் அகலமானதாக உள்ளன.
இதனால், பூமியின் வெப்பத்தால் மேலெழும் வெப்பக்காற்றில் பறப்பதால், எளிதாக பறந்துச் செல்லும். நீரில் கூட்டமாக இரைதேடிச் செல்லும் இந்த பறவைகள் அவ்வப்போது அலகைப் பிளந்தவாறே நீரில் தலையை நுழைத்து, இரு பக்கமும் அசைத்து மீனைப் பிடித்து அலகால் நசுக்கிக் கொன்று விழுங்குகின்றன.
மீன்கள், தவளைகள், பாம்புகள், பெரிய வெட்டுக்கிளிகள் உள்ளிட்டவற்றை இப் பறவைகள் விரும்பி உண்ணுமாம்.
இது குறித்து இனிகோநகர் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கூறுகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இப் பறவை ஆஸ்திரேலியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து இங்கு கடற்கரையையொட்டி அலையாத்தி காடுகளுக்கு இடையே இருக்கும் உடைமரத்தில் கூடுகள் கட்டி முட்டையிடுவது வழக்கம்.
30 நாள்களில் குஞ்சு பொரித்து சிறிது வளர்ந்த பிறகு இவை மீண்டும் ஆஸ்திரேலியா சென்று விடும். தற்போது இந்தப் பறவைகள் கடற்கரையில் இங்குள்ள கொக்குகளுடன் சேர்ந்து மீன்களை வேட்டையாடி உண்பதோடு, மூன்று நான்கு மஞ்சள் மூக்கு நாரை
பறவைகள் ஒன்றிணைந்து கடலுக்குள் பாசத்தோடு உற்சாகமாக விளையாடுகின்றன. இதை காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் கண்டு ரசித்துச் செல்கின்றனர் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...