இதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கவும், ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் வழங்கவும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவும், உணவு செலவு மானியத்தை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஆண்டுக்கு ஒருமுறை உயர்த்தி வழங்குதல்,சத்துணவு திட்டத்தில் புதிய நியமனத்தின் போது 50 சதவீதம் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வழிச்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் உடனடியாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சூலக்கரை போலீஸார் 50 ஆண்கள் உள்பட 600 பேரை கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் 4 வழிச்சாலையில் அரை மணிநேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.