விருதுநகர் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை
விருதுநகர் அருகே அல்லம்பட்டி அனுமான் நகரைச் சேர்ந்தவர் நல்லவீரன்(28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவே நல்லவீரன்


விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையின் காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரரித்து வருகின்றனர்.
விருதுநகர் அருகே அல்லம்பட்டி அனுமான் நகரைச் சேர்ந்தவர் நல்லவீரன்(28). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.இந்நிலையில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகவே நல்லவீரன் இருந்து வந்தார். அதையடுத்து, குடும்பத்தினருடன் கடந்த வாரம் பிரச்னை செய்து யாருடனும் பேசாமலும் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலையில் முத்துராமன்பட்டி ரயில்வே கேட்டை கடந்து ரயில் வழித்தடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது யாரும் எதிர்பாரத நேரத்தில் திடீரென அந்த வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்துள்ளார். இதில், உடல் இரு துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக தகவலறிந்த ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...