திருவண்ணாமலை அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 3 வாலிபர்கள் இறந்தனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து தி.மலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவண்ணாமலை அடுத்த வேட்டவலத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்கிற ராஜா(27), விஜய்(23), தரணி(22), ஜெகதீசன்(19), பிரதாப்(21), சஞ்சய்காந்தி(24) ஆகியோர் வியாழக்கிழமை இரவு 11 மணிக்கு மேல் ஒன்றாக ஓட்டலில் சாப்பிட்டனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு ஒரே ஆட்டோவில் புறப்பட்டனர். அப்போது வேட்டவலம் நோக்கி சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது நேரெதிரே வந்த லாரி மோதியது.
இதில் ஆட்டோ படுசேதமடைந்தது. இதனால் லாரி டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். பின்னர் ஆட்டோவில் பயணித்த ராஜசேகர் என்கிற ராஜா, விஜய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் ஆட்டோ டிரைவர் வசந்தராஜன்(29) உள்பட 5 பேர் படுகாயம் அடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் ஆட்டோ டிரைவர் வசந்தராஜன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேúயே இறந்தார்.
மேலும் தரணி, ஜெகதீசன் ஆகியோர் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும், பிரதாப் என்பவரை சென்னை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. மேலும் சஞ்சய்காந்தி திருவண்ணாமலை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வேட்டவலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!
தவெக தலைவர் விஜய் இன்று எங்கு பிரசாரம் செய்கிறார்?

தமிழ்நாட்டை வஞ்சிக்க நினைப்பவர்களுக்கு நான் டேஞ்சர்! - முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

