தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

குண்டும், குழியுமாக மாறிப்போன கிராமச் சாலை!

திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நத்தம் கிராமச் சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

News image
Updated On :22 ஜனவரி 2013, 9:38 pm

திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நத்தம் கிராமச் சாலை முறையான பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக உள்ளதால் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

நத்தம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்க்கு செல்லும் சாலை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தார்சாலையாக மாற்றப்பட்டது.

ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக அச்சாலை மிகவும் பழுதடைந்து விட்டது. குறைந்த தரத்தில் சாலை அமைக்கப்பட்டதே இதற்கு காரணம் என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

மாம்பாக்கம், ராமகிருஷ்ணாபுரம், மாம்பாக்கசத்திரம், ஜனாகாபுரம் உள்ளிட்ட 10 கிராம மக்கள் நாள்தோறும் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க திருத்தணிக்கு வருவதற்கு இச்சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அகூர் கிராமத்தில் இருந்து நத்தம் கிராமம் வழியாக கோரமங்கலம் இருளர் காலனி வரை செல்லும் சாலை சுமார் 3 கிலோமீட்டர் வரை மிகவும் பழுதடைந்துக் காணப்படுகிறது.

மேலும் மழை பெய்யும் நேரங்களில் சாலையில் பள்ளங்களில் தண்ணீர் தேங்குகிறது. தற்போது சாலை முழுவதும் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனால், அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, இரவு நேரங்களில் அப்பகுதியில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.இந்தச் சாலையை சீரமைக்கக் கோரி கிராம மக்கள் ஊராட்சி மன்றத் தலைவர், ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.